குழிக்குள் இறங்கி மக்களை கைது செய்த போலீஸ் |people threatening to attend the Jeeva samadhi
புதுச்சேரி அரியாங்குப்பம் செட்டிகுளம் குடியிருப்புவாசிகள் சிலர் அங்கு கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு மனைபட்டா கேட்டு பல போராட்டங்களை நடத்தினர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இடத்தை காலி செய்ய சொல்லி தொகுதி என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பாஸ்கர் மிரட்டுவதாக குற்றம் சாட்டினர். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கலெக்டர் நடத்திய மக்கள் குறை தீர் கூட்டத்தில் பட்டா கேட்டு மனு அளித்து தங்கள் ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். தங்களுக்கு மனை பட்டா தராவிட்டால் நித்தியானந்தாவின் கைலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கடுப்பான மக்கள் தங்கள் வீட்டின் பின்புறம் குழி தோண்டி ஜீவசமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த சப் கலெக்டர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த சிலர் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக ஜீவசமாதி குழிகளுக்குள் இறங்கி கைது செய்து அழைத்து சென்றனர்.