உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Puducherry | Pitari Amman Kumbabhishekam temple

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Puducherry | Pitari Amman Kumbabhishekam temple

புதுச்சேரி அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் மகா கணபதி, மாரியம்மன், திரவுபதியம்மன், பச்சை வாழியம்மன், பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், ஐயனாரப்பன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 13ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், மகாசுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு 7 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. 4 ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. விநாயகர் கோயில், பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன், பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், திரவுபதியம்மன், மாரியம்மன், பச்சைவாழியம்மன் ஆகிய கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சோரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை