உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் | Pondicherry University |Tamil department old students meet புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் தமிழ் துறை கருத்தரங்க வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் தமிழ்த் துறைகளில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். புல முதன்மையர் சுடலை முத்து மற்றும் இணை பேராசிரியர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியி தமிழ்த் துறையில் படித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயர் பொறுப்புகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தாங்கள் பல்கலைக்கழக நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழக உயர் கல்வி கோவை மற்றும் மதுரை மண்டல மண்டல இணை இயக்குனர்கள் கலைச்செல்வி, குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் மாணவர்களாக படித்து உயரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பாராட்டப்பட்டனர்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி