₹ 12,700 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் | Pondy budget central govt accept
லோக்சபா தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி சட்டசபையில் 2024 - 25 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டக்குழு கூட்டம் கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இதில் 2024 - 25ம் நிதியாண்டுக்கு 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்றே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் உள்துறை அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் புதுச்சேரி சட்டசபையில் 2024 - 25 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.