/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ சுற்றுச்சூழல் சான்று வழங்க லஞ்சம்| Puducherry |CBI Officers Trapped
சுற்றுச்சூழல் சான்று வழங்க லஞ்சம்| Puducherry |CBI Officers Trapped
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இயங்காத தனியார் கம்பெனியை சென்னையை சேர்ந்த நபர் புதிதாக தொடங்க மத்திய சுற்றுச்சூழல் துறையில் சான்று கேட்டு விண்ணப்பித்தார். சான்று வழங்க சுற்றுச்சூழல் அதிகாரி சீனிவாசராவ் புரோக்கர் ரமேஷ்கண்ணன் மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத கம்பெனி உரிமையாளர் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய இரண்டரை லட்சம் ரூபாயை ரமேஷ்கண்ணனிடம் கம்பெனி உரிமையாளர் கொடுத்தார். அதில் 50 ஆயிரத்தை புரோக்கர் கமிஷன் எடுத்து கொண்டு 2 லட்சம் ரூபாயை சுற்றுச்சூழல் அதிகாரி சீனிவாசராவிடம் கொடுத்தார்.
செப் 21, 2024