புதுச்சேரியில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் | PWD Work | Puducherry
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டன. இதுகுறித்த விவரங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் விளக்கிக் கூறினர். இதுகுறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உப்பனாற்றின் மீது கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள் 26 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படும். கவர்னர் அலுவலகம் மற்றும் இல்லம் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
செப் 06, 2024