ரங்கசாமி அறிவிப்பு | Rice distribution For Ration Cards Rangasmy
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-National Institute of Nutrition) இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவில் உணவு முறை Diet and Bio-marker Study in India (DABS-I) குறித்து நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏற்கனவே 24 மாநிலங்களில் தரவு சேகரிப்பை முடித்துள்ளனர். இப்போது மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத் இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் 50 வெவ்வேறு வார்டுகள் மற்றும் கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசுச் செயலர் முத்தம்மா. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவன மூத்த ஆராய்ச்சியாளர் ஆனந்தன், நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மஞ்சு ராகி, விஞ்ஞானி Dr.தனலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார்