உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ அதிகாரி அலுவலகமும் தர்ணா | sanitation workers strike

மருத்துவ அதிகாரி அலுவலகமும் தர்ணா | sanitation workers strike

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் TKT security centre என்ற நிறுவனம் மூலம் 7 ஆண்டுகளாக 92 பேர் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக அக்டோபர் 1 ம் தேதி முதல் புதிய ஊழியர்கள் பணியாற்றப்பட உள்ளனர். இதைக் கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மருத்துவ அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மருத்துவ அதிகாரியை சந்தித்து 7ஆண்டுகளாக பணி செய்தவர்களை எப்படி பணி நீக்கம் செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதல்வர் ரங்கசாமியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊழியர்களுக்கு உறுதி அளித்தார். பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என துாய்மை பணியாளர்கள் அறிவித்தனர்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை