பார் ஊழியர் கத்தியால் குத்தியில் கல்லுாரி மாணவர் பரிதாபம் | Puducherry | Stabbing at birthday party
பார் ஊழியர் கத்தியால் குத்தியில் கல்லுாரி மாணவர் பரிதாபம் / Puducherry / Stabbing at birthday party Karaikudi youth dies மதுரையை சேர்ந்தவர் ஷாஜன். கல்லுாரி மாணவரான இவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கல்லுாரி நண்பர்களுடன் புதுச்சேரி வந்தார். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள தனியார் பாரில் நண்பர்களுடன் மது குடித்தார். அங்கு டான்ஸ் ஆடிய ஒரு பெண் குறித்து பேச்சு எழுந்தது. இதில் பாதுகாப்பில் இருந்த பவுன்சர்களுக்கும், ஷாஜனின் நண்பர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சிவகங்கையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோஷிக் சண்முகசுந்தரம் வயது 23 என்பவரை மது பார் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே சண்முகசுந்தரம் இறந்தார். தலையில் கத்திகுத்து காயமடைந்த ஷாஜன் புதுச்சேரி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அவரை ICUவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரியகடை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மதுபான ஊழியர் கைது செய்யப்பட்டார். 10க்கும் மேற்பட்ட பவுன்சர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு போராடிய மோஷிக் சண்முகசுந்தரத்தை ஹாஸ்பிடலுக்கு செல்ல விடாமல் ஒரு மணிநேரம் போலீசார் தடுத்ததால் மாணவன் உயிரிழந்ததாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.