சிறப்பு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டம் |Puducherry | State Basketball Tournament
சிறப்பு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டம் /Puducherry / State Basketball Tournament கிராமப்புற காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத சிறப்பு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான மூவர் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ஒரு நாள் போட்டியில் புதுச்சேரி, நெய்வேலி, நெய்வேலி டவுன்ஷிப், ஆரோவில், விழுப்புரம் என 5 அணிகள் பங்கேற்றன. இறுதி சுற்றில் நெய்வேலி அணி முதலிடமும், விழுப்புரம் அணி 2ம் இடமும், புதுச்சேரி அணி 3ம் இடம் பெற்றன. புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு சங்க செயலாளர் பஷீர், விளையாட்டு துறை அதிகாரிகள் ஆனந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.