உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சேற்றில் சிக்கி பயணிகள் அவதி | temporary bustand muddy Passenger suffered

சேற்றில் சிக்கி பயணிகள் அவதி | temporary bustand muddy Passenger suffered

புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் 38 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடக்கிறது. இதனால் AFT மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு சிறு மழை பெய்தாலும் பஸ் ஸ்டாண்ட் சகதி காடாகி விடும். புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருவதால் பஸ் ஸ்டாண்ட் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. ஆயுத பூஜை விடுமுறை முடிந்து இன்று ஊருக்கு திரும்பிய பயணிகள் சேற்றில் சிக்கி அவதிப்பட்டனர். பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ