உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பத்மஸ்ரீ முனுசாமி செதுக்கிய சிலைகள் மருதகாளியம்மன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

பத்மஸ்ரீ முனுசாமி செதுக்கிய சிலைகள் மருதகாளியம்மன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

பத்மஸ்ரீ முனுசாமி செதுக்கிய சிலைகள் மருதகாளியம்மன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது| Terracotta| 20 ton horse | Pondicherry நாமக்கல் மருதகாளியம்மன் கோயில் பழமையானது. இந்தப் பொற்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் பெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிேஷகம் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து கற்களால் கட்டுமானம் எழுப்பி தங்கக்கூரை வேயப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோயிலில் களிமண் பிள்ளையார், காத்தவராயன், மதுரை வீரன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராஜகோபுரத்தின் முன் வைப்பதற்காக இரண்டு களிமண் குதிரைகள் புதுச்சேரியில் தயாரிக்க கோயில் நிர்வாகம் மண் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமியிடம் ஆர்டர் கொடுத்தது. இதற்காக புவிசார் குறியீடு பெற்ற சங்கராபரணி ஆற்றின் களி மண்ணால் 16 அடி உயரம், 9 அடி நீளம் மற்றும் தலா 10 டன் எடையுடன் இரண்டு டெரக்கோட்டா குதிரை சிலைகளை பத்மஸ்ரீ முனுசாமி உருவாக்கினார். சிலைகளின் பணிகள் முடிவடைந்த நிலையில் குதிரை சிலைகளுக்கு பூஜை செய்து மருதகாளியம்மன் கோயிலுக்கு பாதுகாப்பாக லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை