இடிபாடுகளில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு | Torrential Rain | Elderly Person Dies | Puducherry
இடிபாடுகளில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு | Torrential Rain | Elderly Person Dies | Puducherry புதுச்சேரியில் நேற்றிரவு 8 மணி முதல் 9 மணி வரை இடியுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் மேட்டுப்பாளையம் லாரி முனையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அங்குள்ள தொழிற்சாலையின் 25 அடி நீளம், 15 அடி உயர சுற்றுச்சுவர் அருகே மழைக்கு மக்கள் ஒதுங்கி நின்றனர். அப்போது சுற்றுச்சுவர் திடீரென சரிந்ததில் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் துரிதமாக இறங்கினர். ஸ்பாட்டுக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய 2 பெண்கள் உயிருடன் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர், இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பி இரண்டு பெண்களின் உறவினரான மேட்டுப்பாளையம் கண்ணாமணி வயது 80 என தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த முதல்வர் ரங்கசாமி விவரங்களை கேட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் அறிவுறுத்தினார். அமைச்சர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், அழகு உடனிருந்தனர்.