கலங்கரை விளக்கமாய் தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி | Dinamalar Vazhikatti | Puducherry
என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் குழப்பம் தீர்ந்தது; மனம் தெளிந்தது மாணவச் செல்வங்கள் செம உற்சாகம்! டிஸ்க்: கலங்கரை விளக்கமாய் தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி / Dinamalar Vazhikatti / +2 Students Participation / Puducherry புதுச்சேரியில் இரண்டு நாள் கல்வி திருவிழாவாக நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று இனிதே நிறைவு பெற்றது. இறுதி நாளிலும் குவிந்த மாணவர்கள்,பெற்றோர்கள் கல்வியாளர்களிடம் நேரடியாக ஆலோசனை பெற்று, எதிர்கால படிப்புகள் குறித்து குழப்பம் தீர்ந்து தெளிவு பெற்றனர். ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்; எதை படித்தால் வாழ்வு வளமாகும்; எதிர்காலம் சிறக்கும் என்ற ஆலோசனைகளை தெரிவிக்கும், இந்தாண்டிற்கான தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது. கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்லுாரி பிரதிநிதிகளின் ஆலோசனை நிகழ்வுகள் இடம் பெற்றன. முதல் நாள் கருத்தரங்கில் கோர் இன்ஜினியரிங் படிப்புகள், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம், எதிர்கால சி.ஏ., வணிகவியல் படிப்புகளில் வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பம், சென்டாக் அட்மிஷன், வேலைவாய்ப்பு திறன், உடனடி வேலை அளிக்கும் படிப்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி விளக்கம் அளித்தனர். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்றும் மாணவர்கள் அலைகடலென திரண்டு வந்தனர். கருத்தரங்க காலை அமர்வில் சென்னை அமிர்தா விஷ்வ வித்யா பீடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரசன்னகுமார், ஐ.டி., கம்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்தும், மகேந்திரா அண்ட் மகேந்திரா டெக்னோ இன்னோவேஷன் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேசினர். bytes: சர்வேஷ் டேப்லெட் பரிசு வென்றவர், கும்பகோணம் 00:03 - 00:36 நவீன் டேப்லெட் பரிசு வென்றவர், கடலுார் 00:39 - 01:03 லக்ஸானிகா மாணவி, கடலுார் 01:08 - 01:20 01:23 - 01:35 01:39 - 01:43 காலை அமர்வு கருத்தரங்கில், ஐ.டி., கம்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்து சென்னை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரசன்னகுமார் மற்றும் தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் வேலைக்கான திறன்கள் குறித்து மகேந்திரா அண்ட் மகேந்திரா டெக்னோ இன்னோவேஷன் துணை தலைவர் சங்கர் வேணுகோபால் பேசினர். எதிர்கால இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி மற்றும் ‛மரைன் கேட்டரிங் ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்து மதுரை சுப்பலட்சுமி அறிவியல் கல்லுாரி மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறைத் தலைவர் சுரேஷ்குமார் விளக்கம் அளித்தனர். மாலையில் நடந்த இரண்டாம் அமர்வு கருத்தரங்கில், ‛வங்கிக் கடன் பற்றி வங்கியாளர் விருத்தாசலம், சர்வதேச நிதி சார்ந்த படிப்புகள் பற்றி கல்வியாளர் அரவிந்த் மற்றும் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வு பற்றி கல்வியாளர் அஸ்வின் ஆகியோர் விளக்கம் அளித்தனர். கல்வி ஆலோசகர்கள் கூறிய உயர் கல்வி தொடர்பான கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்துக்களை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டனர். bytes: காயத்ரி ஸ்மார்ட் வாட்ச் பரிசு வென்றவர், ஏம்பலம், புதுச்சேரி 01:48 - 02:10 புருேஷாத் மாணவர், புதுச்சேரி 02:12 - 02:30 02:32 - 02:43 சாய் ஆதித்யன் ஸ்மார்ட் வாட்ச் பரிசு வென்றவர், விழுப்புரம் 02:50 - 03:18 தங்கமலர் அரசு பள்ளி ஆசிரியை, புதுச்சேரி 03:26 - 03:44 வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் 50 ஸ்டால்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு கல்லூரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கிறது. அங்குள்ள வசதிகள் விவரம், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விவரம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டதால் தேவையில்லாத அலைச்சல் இல்லை. இறுதி நாளிலும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், அங்கிருந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளின் பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து, நேரடி ஆலோசனை பெற்றனர். bytes: ரெங்கராஜன் பெற்றோர், புதுச்சேரி 04:14 - 04:32 ஹரி பிரியா மாணவி, புதுச்சேரி 05:04 - 05:20 05:30 - 05:58 பூஜாஸ்ரீ மாணவி, புதுச்சேரி 06:03 - 06:24 இரு நாட்களும் நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த இரு நாட்களில் 26 மாணவ மாணவிகள் பரிசினை வென்றனர். புதுச்சேரியில் மாணவர் கல்வி திருவிழா போல, கோலாகலமாக நடத்தப்பட்ட தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று இனிதே நிறைவு பெற்றது. இரு நாட்களும் உயர்கல்வி குறித்த ஆலோசனை பெற்ற மாணவர்களும், பெற்றோரும், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்து குழப்பம் தீர்ந்து, தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். bytes: மகாலட்சுமி மாணவி, கடலுார் 01:10 - 01:24 இளந்தமிழன் மாணவர், கடலுார் 02:30 - 02:56 03:01 - 03:07 ரித்திக் மாணவர், புதுச்சேரி 03:20 - 03:41 இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம், ருசி பால் நிறுவனம், எஸ்.மீடியா சேனல், அக்குவாகீரின் குடிநீர் மற்றும் 92.7 பிக் எப்.எம்., ஆகியவை இணைந்து வழங்கின. புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த தினமலர் நாளிதழுடன் கரம் கோர்த்து, மாணவர்களுக்கு ஆலோசனை அளித்த, அனைத்து கல்வி நிறுவனங்கள், கருத்தரங்கில் பங்கேற்ற துறை சார் வல்லுநர்கள், உயர் கல்வித் துறை இயக்குநர் அமன் சர்மா, சென்டாக் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தினமலர் நாளிதழ் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டது.