/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கொடியேற்றத்துடன் விழா துவக்கம் | Villianur Church 147th Anniversary Festival
கொடியேற்றத்துடன் விழா துவக்கம் | Villianur Church 147th Anniversary Festival
புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் 147-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா உருவம் தாங்கிய கொடி மாதா குளத்தை சுற்றி கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஆலய கொடிமரத்தில் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். ஏப்ரல் 14ம் தேதி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
ஏப் 06, 2024