கையும் கோபமாக சிக்கிய மூவர் | bribe | 3 officers arrested | Ramnad
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அனீஸ் நகரைச் சேர்த்தவர் முகமது இப்ராஹிம்ஷா. பில்டிங் காண்ட்ராக்டர். உறவினரின் வணிக வளாகம் மற்றும் வீடு கட்டி வருகிறார். அதற்கான சொத்துவரி ரசீது கேட்டு தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், கிளர்க் ரவிச்சந்திரனை அனுகினார். 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சொத்துவரி உடனே கிடைக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத இப்ராஹிம்ஷா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய பணத்தை போலீசார் அவரிடம் கொடுத்தனர். மற்றொரு கட்டிட பொருளாளரான நைனாமுகமது மூலம் பேரூராட்சி கம்யூட்டர் ஆப்ரேட்டர் தொண்டிராஜிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், கிளார்க் ரவிச்சந்திரன், ஊழியர் தொண்டி ராஜ் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.