உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / கிராமத்தினர் கோயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கிராமத்தினர் கோயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கிராமத்தினர் கோயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் |Ramanathapuram | Aiyanar temple issue | Complaint against supporter of actor Vadivelu ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டுடைய அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயில். காட்டுபரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோவிலாகும். கோயிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் அறங்காவலர் பாக்யராஜ் ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோயிலாக மாற்ற முயற்சி செய்வதாக குற்றசாட்டு எழுந்தது. . காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் கோயிலின் முன்பு நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோயிலுக்கு புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகள் நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !