பயணிகள் குழப்பம் | Bus route town names are confusing | Kamuthi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் ஸ்டாண்டில் இருந்து மூக்கையூருக்கு பஸ் புறப்பட்டது. பஸ் முன்பு டிஜிட்டல் பெயர் பலகையில் வழித்தட ஊர்களின் பெயர்கள் மின்னல் வேகத்தில் ஓடியது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். எந்த ஊருக்கு பஸ் போகுது என டிரைவரிடம் பயணிகள் விசாரித்து பஸ் ஏறினர். இதற்கிடையே கண்டக்டர் உணவு பார்சல் வாங்க பஜார் சென்றார். கண்டக்டர் இல்லாமல் பஸ்சை ஸ்டார்ட் செய்த டிரைவர் பஜாரில் பஸ்சை நிறுத்தினார். கண்டக்டர் வந்ததும் பஸ் புறப்பட்டது. மின்னல் வேக டிஜிட்டல் ஊர் பெயர் குழப்பத்தால் பயணிகள் அந்த பஸ்சை தவிர்த்தனர். பழுதான டிஜிட்டல் பெயர் பலகையை அகற்றி விட்டு போக்குவரத்து கழகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
மே 15, 2024