/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதா? 7 கிராம மக்கள் கொந்தளிப்பு | Ramanadapuram
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதா? 7 கிராம மக்கள் கொந்தளிப்பு | Ramanadapuram
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் நத்தம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆண்டநாயகபுரம், முத்தாதிபுரம், கள்ளக்குளம் உட்பட 7 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியை அப்படியே பக்கத்தில் உள்ள அபிராமபுரம் பேரூராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்படி இணைத்தால் வரி உயரும், 100 நாள் வேலைத்திட்டத்தை பெண்கள் இழக்க நேரிடும் என்று கூறி 7 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று கலெக்டர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜன 08, 2024