உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / சென்னை டூ ராமநாட் வரை கண்டெய்னர் லாரியில் பரிசு பொருட்கள் வந்தது எப்படி

சென்னை டூ ராமநாட் வரை கண்டெய்னர் லாரியில் பரிசு பொருட்கள் வந்தது எப்படி

சென்னை டூ ராமநாட் வரை கண்டெய்னர் லாரியில் பரிசு பொருட்கள் வந்தது எப்படி | Ramanathapuram | Officials involved in election duty are acting in favor of the DMK திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவிபட்டினம் பிரைமரி ஹெல்த் சென்டர் அருகே திருச்சி ராமேஸ்வரம் ஹைவேயில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தேவிபட்டினம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் 50,000 ரூபாய் மதிப்பிலான ​திமுக கட்சி கொடிகள், ​ஸ்டிக்கர்கள், ​கீ-செயின்கள், ​தொப்பிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பொருட்களைக் கொண்டு செல்ல முறையான ஆவணங்கள் இல்லை. அவற்றை பறிமுதல் செய்து அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சென்னையில் இருந்து புறப்பட்ட கன்டெய்னர் லாரி மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் வரை வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை டூ தேவிபட்டினம் வரை வரும் வழியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனத்தை கவனிக்கத் தவறியது எப்படி. அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த வாகனத்தை அனுமதித்தார்களா திமுகவிற்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகின்றனரா என கட்சியினர் சந்தேகம் கிளப்பினர். தேர்தல் விதிகளை அலட்சியப்படுத்தும் திமுகவினர் மற்றும் துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை