துாய்மை பணியாளர்களுக்கு முதல் மரியாதை | First respect to the cleaners | Kamuthi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேல கொடுமலூர் கிராம ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் கோவிட் காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக உயிரை பணயம் வைத்து சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர். அவர்களை கௌரவிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகப் புதிய கட்டிடத்தை துாய்மை பணியாளர்களை வைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது. முன்னதாக பெண் துாய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மலர் துாவி கிராம மக்கள் மற்றும் மும்மதத்தினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர். புதிய கட்டிடம் திறப்பு விழாவில் அனைத்து மத சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். துாய்மை பணியாளர்களை கவுரவித்த ஊராட்சி நிர்வாகத்தை பலரும் பாராட்டினர்.