ஒரு மாதம் இலங்கை கடற்பரப்பில் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வலியுறுத்தல்
ஒரு மாதம் இலங்கை கடற்பரப்பில் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வலியுறுத்தல் / Ramanathapuram / Indian-Sri Lankan Fishermen Talks இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை வவுனியாவில் தொடங்கியது. இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கு, இலங்கை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்திய மீனவ பிரதிநிதிகள் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தாமல் இருப்பது, இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது குறித்து இருதரப்பு பேச்சு வார்த்தையில் இடம் பெறும். இந்திய மீனவ பிரதிநிதிகளாக ராமநாதபுரம் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகிய 5 பேர் கொண்ட குழு மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளாக யாழ்ப்பாணம் சுப்பிரமணியம், ராமச்சந்திரன், அன்னராசா, வர்ண குலசிங்கம், முல்லைத்தீவு மரியராசா, மன்னார் ஆலம், சங்கர், கிளிநொச்சி பிரான்சிஸ், அந்தோணி பிள்ளை உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக தமிழக மீனவர்கள் ஒரு மாத காலம் இலங்கை கடற்பகுதியில் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.