உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு கயாக்கிங் பயணம்

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு கயாக்கிங் பயணம்

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு கயாக்கிங் பயணம் | Kayaking challenge trip கடலோர காவல் படை பணியாளர்களிடையே சாகச உணர்வை ஊக்குவிப்பதற்கும், கடலோரப் பாதுகாப்பு, நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கடலோர மக்களிடையே பரப்பும் வகையில் இந்திய கடலோர காவல் படைக்குழு ராமேஸ்வரம் தீவை சுற்றிவரும் சவாலான கயாக்கிங் பயணத்தைத் தொடங்கியது. இதில் மூன்று நாட்களில் 80 கிலோ மீட்டர் பயணிக்கவுள்ளனர். இப்பயணம் இந்திய கடலோர காவல்படை மண்டபம், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்தது. மேலும் குவெஸ்ட் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஓஷன் அம்பாசிடர்ஸ் அறக்கட்டளை இணைந்து கயாக்கிங் சவால் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் துவக்க நாளான இன்று இந்திய கடலோர காவல் படை பணியாளர்கள் இருவர், குவெஸ்ட் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த ஒருவர் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் இருந்து ஓலைகுடா வரை சுமார் 27 கிலோ மீட்டர் கயாக்கிங் பயணம் மேற்கொண்டனர். இவற்றைக் கடக்க இவர்கள் ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்டனர். பயணத்தின் போது காற்றின் திசைவேகம் சூரிய வெப்பம் ஆகிய இயற்கை பேரிடர் பெரும் சவாலாக அமைந்தது. இரண்டாவது நாள் பயணமாக ஓலைகுடாவில் இருந்து குந்துகல் வரை பயணிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக குந்துகல்லில் இருந்து அரிச்சல் முனை வரை பயணித்து சாகச பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை