உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / குவைத்தில் 26 ஆண்டுகள் வேலை பார்த்தவருக்கு நேர்ந்த துயரம் | The tragedy of those who worked in Kuwai

குவைத்தில் 26 ஆண்டுகள் வேலை பார்த்தவருக்கு நேர்ந்த துயரம் | The tragedy of those who worked in Kuwai

குவைத்தில் 26 ஆண்டுகள் வேலை பார்த்தவருக்கு நேர்ந்த துயரம் | The tragedy of those who worked in Kuwait ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன் ராமு வயது 65. இவர் குவைத் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக பணியாற்றினார். அவர் பணி நிறைவு செய்து அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்ப தயாரானார். விமான டிக்கெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு வாரத்தில் ஊருக்கு வர வேண்டியவர் குவைத்திலேயே தங்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் அவர் தங்கிருந்த அப்பார்மென்ட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய கருப்பணன் ராமுவை மீட்டு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு அவர் இறந்தார். எனது தந்தையை உயிருடன் பார்க்க முடியாவிட்டாலும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகன் சரணவகுமார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

ஜூன் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை