₹25,000 பரிசு வென்ற மாற்றுத்திறனாளி | Ramanathapuram | Mr. South India | Mens Physique Competition
₹25,000 பரிசு வென்ற மாற்றுத்திறனாளி | Ramanathapuram | Mr. South India | Mens Physique Competition ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் மகாலில் லிப்ட்மென்ட் டைனமிக்ஸ் சார்பில், மிஸ்டர் சவுத் இந்தியா 2026 ஆணழகன் போட்டி நடைபெற்றது. போட்டியில், 50, 55, 60, 65, 70, 75 மற்றும் 80 ஆகிய எடைப்பிரிவுகளில், தென்மாநிலங்களில் இருந்து 120 வீரர்கள் பங்கேற்று தங்கள் கட்டுமஸ்தான் உடல் திறனை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த வீரர்கள் மிஸ்டர் சவுத் இந்தியா சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். கோயமுத்தூரைச் சேர்ந்த பேச இயலாது, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி சுலைமான் மிஸ்டர் சவுத் இந்தியா சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த முதல் 3 இடம் பிடித்த 3 வீரர்களுக்கு தலா 3000 ரூபாய், 2000 ரூபாய், 1000 ரூபாய் பரிசுத்தொகையை ராமநாதபுரம் எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.