அமமுக பதவி தேவையில்லை; தவெக தொண்டனாக தொடர சூளுரை
அமமுக பதவி தேவையில்லை; தவெக தொண்டனாக தொடர சூளுரை | Ramnad AMMK Party broke up | Decided to travel the CM Vijay route | Tamilnadu Politics ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் திருவாடானை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை கொண்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தினகரன் தலைமயைிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பல இடங்களில் டெபாசிட் கூட வாங்கவில்லை. இந்தப்படுதோல்வி அமமுக தொண்டர்களின் தலையில் இடியை இறக்கியது. இனியும் அமமுகவில் தொடர்வது வேஸ்ட் என நிர்வாகிகள் பலர் முடிவு செய்தனர். அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஒன்றியம், நகரம், கிளைக்கழகம், மாவட்ட கழகம் என அனைத்து நிர்வாகிகள் அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்தனர்.