/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ பள்ளி சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் | Teacher murder | Mudukulathur
பள்ளி சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் | Teacher murder | Mudukulathur
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கண்ணன் வயது 51 என்பவர் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு டூவீலரில் சென்றார். செல்லும் வழியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் ஆசிரியரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்தவர் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக இறந்தார். கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஆசிரியரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
ஜூன் 11, 2024