உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / தண்டவாளத்தில் உரசிய ரயில் சக்கரம்! தீப்பொறி பறந்ததால் நடுவழியில் நிறுத்தம்

தண்டவாளத்தில் உரசிய ரயில் சக்கரம்! தீப்பொறி பறந்ததால் நடுவழியில் நிறுத்தம்

தண்டவாளத்தில் உரசிய ரயில் சக்கரம்! தீப்பொறி பறந்ததால் நடுவழியில் நிறுத்தம் | Bangalore to Patna Train பெங்களூரில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக பாட்னாவுக்கு வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. பெங்களூருவில் புறப்பட்ட இந்த ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் முகந்தராயபுரம் அருகே வரும் போது திடீரென கோளாறு ஏற்பட்டது. இன்ஜினில் இருந்து 2வது பெட்டியில் உள்ள சக்கரங்கள் சுற்றாமல் தண்டவாளத்தில் உரச துவங்கின. இதனால் தீப்பொறி பறந்தது. சுதாரித்த இன்ஜின் டிரைவர் முகுந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை நிறுத்தினார். அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். சக்கரம் பகுதியில் பற்றி எரிந்த லேசான தீயை உடனே அணைத்தனர். சக்கரம் இறுக பிடித்ததையும் சரி செய்தனர். பின்னர் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை