ஒரு சவரன் தங்கம் ₹50 ஆயிரம் ஆன முதல் நாளே ஷாக் | gold rate hike | gold rate today
ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரம் ஆன முதல் நாளே ஷாக் | gold rate hike | gold rate today ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே உள்ள எஸ்பி நகர் பகுதியில் வசிப்பவர் சிட்டி பாபு வயது 62. போக்குவரத்து துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க மனைவி லட்சுமியுடன் சிட்டி பாபு சென்றார். இன்று வீட்டு வேலை பார்ப்பதற்காக வேலைக்கார பெண் சிட்டிபாபு வீட்டுக்கு வந்தார். கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிட்டிபாபு மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். பீரோவில் இருந்த 180 சவரன் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது தெரியவந்தது. தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று தான் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. அன்றைய தினம் இரவே ஸ்கெட்ச் போட்டு 180 சவரன் நகையை கொள்ளையர்கள் அள்ளி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே அளவு நகையை இப்போது புதிதாக வேண்டும் என்றால் 90 லட்சம் ரூபாய் வேண்டும்.