அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் | tree in worship People's opposition to remova
ராணிப்பேட்டைமாவட்டம், மேல்விஷாரம் பகுதிஆற்காடு -வேலூர் செல்லும் சாலையோரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தை அப்பகுதி மக்கள் முனீஸ்வரர் சுவாமி வழிபாட்டிற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆற்காடு -வேலூர் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆலமரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலமரத்தை சுற்றி மக்கள் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலமரத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவிட்டு பின் மரத்தினை அப்புறப்படுத்த வலியுறுத்தினர். ராணிப்பேட்டைபோலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மரத்தை மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.