சேலம் மின் திருட்டு தடுப்புக்குழு அதிரடி | ₹1.72 Penalty for power theft | Attur
சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர் ஆத்துார் அருகே புங்கவாடி பகுதியில் மின் திருட்டு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது விவசாயி நல்லுசாமி என்பவர் விவசாய மின் இணைப்பில் 3 எச்.பி.க்கும் கூடுதலாக மின் மோட்டார் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 78 ஆயிரத்து 737 ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டது. அதே பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் விவசாய மின் இணைப்பில் வணிக பயன்பாட்டுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவது தெரிந்தது. அவருக்கு 93 ஆயிரத்து 335 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், இரு விவசாயிகள் மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அவர்கள் தங்களின் மீதான குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்ததால் தலா 3,000 ரூபாய் அபராதத்துடன் சமரசத் தொகை வசூலிக்கப்பட்டது என்றனர்.