உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சேலம் வாழப்பாடியில் துயர சம்பவம் | a mother who killed her children | vazhapadi | salem

சேலம் வாழப்பாடியில் துயர சம்பவம் | a mother who killed her children | vazhapadi | salem

சேலம் வாழப்பாடியில் துயர சம்பவம் / a mother who killed her children / vazhapadi / salem சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், வயது 35. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி, வயது 30. மகன்கள் விக்னேஷ், வயது 6 மற்றும் சதீஷ்குமார், வயது 3. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. நேற்றிரவு விஜயகுமார் வெளியில் சென்றிருந்தார். அப்போது மகன்களை வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு இளவரசி கொலை செய்தார். தகவலறிந்த விஜயகுமார் உறவினருடன் பைக்கில் வீட்டிற்கு வந்தார். அப்போது துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகர் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மீது பலமாக மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் வாழப்பாடி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். பின் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார் சேலம் அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். வாழப்பாடி போலீசார் விக்னேஷ், சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பினர். மகன்களை கொலை செய்த இளவரசி கைது செய்யப்பட்டார். குடும்ப தகராறில் பெற்ற மகன்களை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி