அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் | ADMK Leader Murder | Admk general secretary Palanisamy
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் | ADMK Leader Murder | Admk general secretary Palanisamy report |Salem அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது: சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகத்தை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி கூறியுள்ளார்.