வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய கைநீட்டி மாட்டிக் கொண்ட பில் கலெக்டர்
வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய கைநீட்டி மாட்டிக் கொண்ட பில் கலெக்டர் | bribe | bill collector arrested | attur | salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய நரசிங்கபுரம் நகராட்சி பில் கலெக்டர் குணசேகரனை அணுகினார். அவர் பெயர் மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முதல்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் தர ராமசாமி ஒப்புக் கொண்டார். எனினும் லஞ்சம் தர விரும்பாத ராமசாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாயை குணசேகரனிடம், ராமசாமி கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச போலீசார் குணசேகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். குணசேகரன் பைக் சீட்டிற்கு அடியில் பதுக்கியிருந்த பணக்கட்டு ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் எவ்வளவு பணம் இருந்தது, லஞ்சப் பணமா என விசாரணை நடக்கிறது.