உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 14 நாட்களுக்குப் பின் மீண்டும் நடைபெற்ற தேர்திருவிழா | church festival | Attur

14 நாட்களுக்குப் பின் மீண்டும் நடைபெற்ற தேர்திருவிழா | church festival | Attur

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 100 ஆண்டு பழமையான கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழாவுக்காக கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. கடந்த 24 ந்தேதி தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது கிறிஸ்து அரசர், ஆரோக்கியமாதா, புனித மிக்கல் ஆகிய மூன்று தேர்களில் சிலைகளை எடுத்து வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது. மறுநாள் பேச்சுவார்த்தையில் டிசம்பர் 1 ம் தேதி தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் இடையே சுமூக தீர்வு ஏற்படவில்லை. தொடர்ந்து கடந்த 4 ம் தேதி இருதரப்பினரிடம் சேலம் ஆயர் ராயப்பன், ஆத்தூர், கெங்கவல்லி பங்குதந்தைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்றிரவு தேர்த்திருவிழா நடத்த முடிவானது. சேலம் ஆயர் ராயப்பன் தலைமையில் திருப்பலி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கிறிஸ்து அரசர் சிலையை ஆலய பங்கு தந்தை பிரகாஷ் எடுத்து வைத்தார். மற்ற இரண்டு சிலைகளையும் பொதுமக்கள் எடுத்து வைத்தனர். அதன்பின் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்த தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ