உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 7 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் சடலம் குடிநீர் தொட்டிக்குள் வீச்சு|Salem |Woman Body Found |Water Tan

7 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் சடலம் குடிநீர் தொட்டிக்குள் வீச்சு|Salem |Woman Body Found |Water Tan

7 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் சடலம் குடிநீர் தொட்டிக்குள் வீச்சு Salem |Woman Body Found |Water Tank சேலம் குணபாலன் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் 62 வயதான ரமேஷ். இவர் அரிசிபாளையம் பகுதியில் உள்ள சௌடேஸ்வரி கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில், தனது மனைவி ஜமுனா ராணி மற்றும் மகனுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். இந்நிலையில், குடும்பத்துடன் கும்பகோணம் சென்று விட்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இன்று காலை குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தபோது, தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷும், அவரது மகன் கௌதமும் தண்ணீர் தொட்டிகளை சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகளில் மூட்டைகள் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, ஒரு மூட்டையில் கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழுகிய சடலமும், மற்றொரு மூட்டையில் தலை மற்றும் மார்பு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையிலும் இருந்தது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து பூசாரி ரமேஷ் மற்றும் அவரது மகன் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் ஜூலி மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வீட்டின் மாடியில் சிறிது நேரம் சுற்றிவிட்டு, பின்னர் அங்கேயே நின்றுவிட்டது. இதனிடையே, சடலத்தின் இடுப்பு பகுதி காணாமல் போனது தெரியவந்ததால், போலீசார் சுற்றுவட்டாரத்தில் தீவிரமாக தேடுதல் நடத்தினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு, பின்புறம் உள்ள கோவிந்தன் தெருவில் சீனிவாசன் என்பவரது வீட்டின் மேற்பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் அடியில் மேலும் ஒரு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதில், பெண்ணின் இடுப்பு பகுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், கொலை நடந்து 3 முதல் 4 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த கொலையை ஒருவரால் மட்டும் செய்திருக்க முடியாது என கருதும் போலீசார், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து கொலை செய்தார்களா அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் கையில் விநாயகர் படம் மற்றும் கணபதி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை