இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொருவருக்கு விஷ ஊசி போட்டு வெறிச்செயல்
இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொருவருக்கு விஷ ஊசி போட்டு வெறிச்செயல்/ Instagram love / decayed body recovery/ Yaercaud பெரம்பலூரைச் சேர்ந்தவர் அப்துல் ஹபீஸ். வயது 22. பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் நான்காம் ஆண்டு மாணவர். இன்ஸ்டாகிராமில் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் காதலித்துள்ளார் அப்துல் ஹபீஸ். திருச்சி துறையூரை சேர்ந்தவர் லோகநாயகி. வயது 32 பெற்றோரை இழந்த இவர் தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தார். இன்ஸ்டாகிராமில் அப்துல் ஹபீஸை காதலித்துள்ளார். வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்தவுடன் லோகநாயகி வீட்டை விட்டு வெளியேறினார். சேலத்தில் ஒரு விடுதியில் தங்கி தனியார் ஸ்டடி சென்டரில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அப்துல் ஹபீஸ் சென்னையை சேர்ந்த I.T ஊழியர் தாவியா சுல்தானா மற்றும் துறையூறைச் சேர்ந்த நர்சிங் மாணவி மோனிஷாவையும் காதலித்துள்ளார். விஷயம் தெரிந்த லோகநாயகி அப்துல் ஹபீசை கண்டித்துள்ளார். ஆரம்பத்தில் அப்துல் ஹபீஸ் லோகநாயகியை தனது மததிற்கு மாறும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. முதலில் மறுத்த லோகநாயகி பின்னர் பர்தா அணிந்து பணிக்கு சென்றுள்ளார். வயது மூப்பு காரணமாக லோகநாயகி கழட்டிவிட அப்துல் ஹபீஸ் முடிவெடுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் தனது மற்ற இரு காதலிகளிடம் லோகநாயகி விவகாரத்தை கூறியுள்ளார் அப்துல் ஹபீஸ். லோகநாயகியை கொலை செய்து விட்டு உங்களுடன் இருப்பேன் என அப்துல் ஹபீஸ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிப்ரவரி ஒன்றாம் தேதி லோகநாயகியை ஏற்காடு மலைக்கு வருமாறு அப்துல் ஹபீஸ் அழைத்தார். காரில் தனது மற்ற இரு காதலிகளுடன் அப்துல் ஹபீஸ் ஏற்காட்டிற்குச் சென்றார். மோனிஷா மயக்கவியல் துறை நர்சிங் மாணவி. அவரது உதவியுடன் அப்துல் ஹபீஸ் மற்றும் சுல்தானா சேர்ந்து லோகநாயகிக்கு மயக்க ஊசி போட்டு உள்ளனர். தற்கொலை செய்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக மயக்க நிலையில் இருந்த லோகநாயகியை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். நேற்று மலைப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் போலீசார் சோதனை நடத்தினர். அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றினர். சடலத்தின் அருகில் கிடந்த ஹேன்ட் பேக்கில் இருந்த ID கார்டை வைத்து, அது லோகநாயகியின் உடல் என உறுதி செய்யப்பட்டது. லோகநாயகியின் செல்ஃபோனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னலை டிராக் செய்த போலீசார், அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது காதலிகளான தாவியா சுல்தானா மற்றும் மோனிஷாவை கைது செய்தனர். விசாரணை தொடர்கிறது.