பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் கைது | Aathur | Vote for DMK Councillor
பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் கைது | Aathur | Vote for DMK Councillor threatens voters சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் 7வது வார்டு, திமுக கவுன்சிலராக உள்ளார். கீரிப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். மல்லியக்கரை போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில், மல்லியக்கரை போலீஸ் ஸ்டேசனில் கடந்த 2016 முதல் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது மோசடி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. 2026 சட்டசபை தேர்தலில், திமுகவுக்கு ஓட்டு போடலனா என்ன செய்வேனு எனக்கே தெரியாது எனக்கூறி ரகளை ஈடுபட்டார். பொதுமக்களை மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில், அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க, திமுக கவுன்சிலரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம், என தெரிவித்தனர்.