பூ வியாபாரிகள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு |Salem | Protest against DMK members
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் வஉசி பூ மார்க்கெட் அகற்றப்பட்டு 15 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 100 கடைகள் கட்டப்பட்டன. இதை 8 மாதம் முன் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் வியாபாரிகளுக்கு இதுவரை கடைகள் ஒதுக்கப்படவில்லை. திமுக பிரமுகர் விமல் உட்பட சிலரிடம் தலா 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று கடைகளை ஒதுக்கியதாக மாநகராட்சி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை மாநகராட்சி மறுத்தது. ஏற்கனவே கடைகள் நடத்திய பூ வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக வ.உசி பூ மார்க்கெட் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி துணை கமிஷனர் பிருந்தா தேவி பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று வியாபாரிகள் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.