கண்காணிக்க தவறிய அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்
கண்காணிக்க தவறிய அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் | Attur | Case registered against DMK members for giving bats and T-shirts to children சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் சிறுவர்களுக்கு டி-ஷர்ட் மற்றும் விளையாட்டு உபகரணங்களை திமுகவினர் வழங்கினர். இது குறித்த வீடியோ வெளியானது. விஏஓ ரகோத்தமன் தேர்தல் விதிமுறைகளை மீறி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செல்லிப்பாளையம் வார்டு துணை செயலாளர் பழனிவேல், வார்டு உறுப்பினர் பழனிவேல் ஆகிய இருவர் மீது ஆத்தூர் நகர போலீசில் புகார் கூறினார். அதே போல் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. திட்ட கண்காணிப்பு மேற்பார்வையாளர் யுவராஜ், தூய்மை பணி மேற்பார்வையாளர் தேசிங்கு ராஜன் ஆகியோர் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி நகராட்சி கமிஷனர் பவித்ரா இருவரையும் சஸ்பெண்ட் செய்தார்.