உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பக்தர்கள் தியானம் செய்ய நந்தி வயிற்றிற்குள் 15 அடி உயர சிவன் சிலை

பக்தர்கள் தியானம் செய்ய நந்தி வயிற்றிற்குள் 15 அடி உயர சிவன் சிலை

பக்தர்கள் தியானம் செய்ய நந்தி வயிற்றிற்குள் 15 அடி உயர சிவன் சிலை | Vazhapadi | Tallest in the world Nandi Idol Kumbabhishekam சேலம் மாவட்டம், வாழப்பாடி வெள்ளாளகுண்டத்தில் ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோயிலில் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான மகா அதிகார நந்திக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 4 ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க அதிகார நந்திக்கு மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. இந்த நந்தி வயிற்றிற்குள் உள்ளேயே 15 அடி உயரத்தில் சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் உள்ளவர்கள் மட்டும் நந்த வயிற்றுக்குள் சென்று தியானம் செய்யலாம். வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த ராஜவேல் உலகிலேயே மிக உயரமான நந்தீஸ்வரனுக்கு சிலையை அமைத்துள்ளார். சிலையை மலேசியா முருகன் மற்றும் ஏத்தாப்பூர் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். நந்தீஸ்வரரை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிவ பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை