உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஸ்கூலா? இல்ல டாஸ்மாக் பாரா?: கொந்தளிக்கும் பெற்றோர் | Drinkers | Drinking in School

ஸ்கூலா? இல்ல டாஸ்மாக் பாரா?: கொந்தளிக்கும் பெற்றோர் | Drinkers | Drinking in School

ஸ்கூலா? இல்ல டாஸ்மாக் பாரா?: கொந்தளிக்கும் பெற்றோர் | Drinkers | Drinking in School| Parents complaint| Attur சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் காலை, மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் வாக்கிங் செல்பவர்கள், விளையாடுபவர்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் வந்து செல்கின்றனர். பள்ளி அருகிலேயே ஆத்தூர் டிஎஸ்பி ஆபீஸ், ஊரக காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வளவு பாதுகாப்பு சூழல் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து மதுப்பிரியர்கள் மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயேயும் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் வாக்கிங் செல்வோர் மற்றும் விளையாடும் சிறுவர்கள் காலில் பீங்கான் குத்தி காயம் ஏற்படுகிறது. பள்ளி வளாகத்திலேயே மது பாட்டில்கள் கிடப்பது பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பள்ளி வளாகத்திற்குள் மது பிரியர்கள் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மே 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை