உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 55 பேர் உயிர் போன பிறகும் கள்ளச்சாராய விற்பனை ஜோர்

55 பேர் உயிர் போன பிறகும் கள்ளச்சாராய விற்பனை ஜோர்

55 பேர் உயிர் போன பிறகும் கள்ளச்சாராய விற்பனை ஜோர்| Age 40, Pending cases 41 | Famous liquor dealer arrested | Athur | Salem சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 40. பிரபல சாராய வியாபாரி. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 55ஐ தொட்ட நிலையிலும் சுரேஷ்குமார் வழக்கம்போல் பாக்கெட் சாராய விற்பனையில் படு பிஸியாக வலம் வந்தார். இவரை கைது செய்ய ஆத்துார் ஊரக இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கல்லாநத்தம் வைத்தியநாதபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் பாக்கெட் விற்பனையில் சுரேஷ்குமார் பிஸியாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 லிட்டர் சாராய பாக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பூர்ணிமா கூறுகையில் பிரபல சாராய வியாபாரி சுரேஷ்குமார் மீது கெங்கவல்லியில் 2014ல் நடந்த கொலை வழக்கு உள்ளது. தவிர சாராயம் கடத்தல், விற்பனை, மணல் கடத்தல், மதுபாட்டில் விற்பனை, அடிதடி உள்பட ஆத்துார் ஊரகத்தில் 13 வழக்குகள், ஆத்துார் டவுனில் 10 வழக்குகள், ஆத்துார் மதுவிலக்கு பிரிவில் 17 வழக்குகள் என மொத்தம் 41 வழக்குகள் உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழு வழக்குகள் என மொத்தம் 48 வழக்குகள் உள்ளன. கடந்த, 2014 மற்றும் 2018 என இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் சாராயம் விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டார் என்றார்.

ஜூன் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை