மண் குத்துதல், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சியில் காளைகள் பிஸி
மண் குத்துதல், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சியில் காளைகள் பிஸி | Pongal Festival | Jallikattu combetition | Attur | Salem தமிழகத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. இதற்காக காளைகள் மற்றும் காளையர்கள் முறையான பயிற்சி எடுத்த பிறகே வாடி வாசலுக்கு களம் காண வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மாவட்டத்தின் கிழக்கு பகுதியான ஆத்தூர், கெங்கவல்லி தம்மம்பட்டி, செந்தாரப் பட்டி, கீரிப்பட்டி, கூடமலை 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடக்கிறது. இதில் சேலம் மாவட்ட அளவில் ஆத்தூர் அருகே கூலமேடு பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. கூடமேடு கிராமத்தில் பாரம்பரியமாக 70 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையொட்டி காளைகளை தயார்படுத்தும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காளைகளுக்கான உணவு மற்றும் பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.