/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ மாணவர்கள் 2 தங்கம், 1 வெண்கலம் வென்று சாதனை | Salem | Kickboxing competition
மாணவர்கள் 2 தங்கம், 1 வெண்கலம் வென்று சாதனை | Salem | Kickboxing competition
புதுடில்லியில் 3 வது வாகோ இந்தியா சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சிங்கப்பூர், ஈரான், ஈராக், நேபாளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கிரியோத்திகா, மாணவர்கள் ராஜா, ஆதிக் திலீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லைட் கனெட் பிரிவில் கிரியோத்திகா தங்கம் வென்றார். கிக் லைட் பிரிவில் ராஜா தங்கம் வென்றார். பாயின்ட் பைட் பிரிவில் ஆதிக் திலீபன் வெண்கலம் வென்றார். ஆத்தூர் வந்த வெற்றி வீரர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு அளித்தனர்.
பிப் 14, 2024