அம்மனுக்கு பாலபிஷேகம் |Salem | Mahashakti Mariamman Temple
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய உடையம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 27 ம் தேதி தொடங்கியது. கணபதி ஹோமம், சக்தி அழைத்தல், பூச்சாற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு வீதி உலா நடைபெற்றது. பால்குட ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு பாலபிேஷகம் நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மே 30, 2024