ஏற்காட்டில் சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு | Minister Rajendran inspection to Yercadu Hill Road
சேலம் டு ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சில ஆபத்தான வளைவுகளும் அடக்கம். விபத்து ஏற்படும்போது சாலையோர தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு வாகனங்கள் ஆழமான பகுதியில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஏற்காடு மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரப்பர் ரோலர் கேஸ் பேரிகார்ட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதை சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். breath: மலைப் பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக செல்லும் வாகனங்கள் ரப்பர் ரோலர் கேஸ் பேரிங்கில் மீது மோதும் போது ஆழமான பள்ளத்தில் விழாமல் வாகனங்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகள் பாதுகாக்கும். முன்னதாக மலைப்பாதையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். சாலையில் போடப்பட்டு வரும் தார்சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என கம்பியை வைத்து ரோட்டில் குத்தி ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் பிருந்தா தேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.