'பட்டாசு பாலா'தயவில் போலீஸ் 'மாமூல்' வாழ்க்கை ஆஹா... ஓஹோ...
பட்டாசு பாலாதயவில் போலீஸ் மாமூல் வாழ்க்கை ஆஹா... ஓஹோ... | Pocket Liquor sales super | Attur | Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனருகே உள்ள பாரில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு சரக்கு மற்றும் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோராக நடக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக பலர் உயிரிழந்தனர். அந்தக்காயம் ஆறுவதற்கு முன் ஆத்துாரில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடக்கிறது. ஆத்துாரை சேர்ந்த திமுக முன்னாள் ஆத்துார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதிவேல் மற்றும் திமுக பிரமுகர் பட்டாசு பாலா மற்றும் கூட்டாளிகள் பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாமூல் வாழ்க்கையை நினைத்து போலீசார் கப்சிப் ஆகி விடுகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக பலர் உயிரிழக்கும் முன் திராவிட மாடல் விடியல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இவ்வழக்கில் பாக்கெட் சாராயம் விற்தாக இருவர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் ஆதரவுடன் ஜோதிவேல் மற்றும் பட்டாசு பாலா ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.