உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / தரமற்ற தின்பண்டங்கள் விற்றது கண்டுபிடிப்பு | Poor quality food | seals for 2 cinema canteens

தரமற்ற தின்பண்டங்கள் விற்றது கண்டுபிடிப்பு | Poor quality food | seals for 2 cinema canteens

தரமற்ற தின்பண்டங்கள் விற்றது கண்டுபிடிப்பு | Poor quality food | seals for 2 cinema canteens | Aathur | salam சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சினிமா தியேட்டரில் சிப்ஸ் சாப்பிட்ட சிலருக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோர் ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமாலிடம் புகார் கூறினர். இதையடுத்து கமிஷனர் உத்தரவுப்படி நகராட்சி துப்புரவு அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். தியேட்டரில் இருந்த கேன்டீனில் தரமற்ற தின்பண்டங்கள் விற்றக்கப்பட்டது உறுதியானதால் கேன்டீனுக்கு சீல் வைத்தனர். அதேபோல் காமராஜர் சாலை கேசவேலு தெருவில் மற்றொரு தியேட்டரின் கேன்டீனில் காலாவதி உணவு பொருட்கள் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த கேன்டீன் உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த தியேட்டர்களுக்கு தின்பண்டங்களை சப்ளை செய்த ஆத்துார் காதர்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை