உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / போஸ்டரை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்| DMK Fails | Poster | Election

போஸ்டரை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்| DMK Fails | Poster | Election

போஸ்டரை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்| DMK Fails | Poster | Election சேலம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை விமர்சித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டினர் போஸ்டரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியை விமர்சித்து சித்திரம் இருந்தது. சர்ச்சைக்குரிய போஸ்டரை பாஜகவினர் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. விஷயம் தெரிந்த திமுகவினர், அந்த ஒன்றியத்தின் பாஜக நிர்வாகிகளை தாக்கினர். குறிப்பாக தனியாக வீடு திரும்பி கொண்டிருந்த கெங்கவல்லி ஒன்றிய தலைவர் செந்தில் ராஜனை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு வேண்டி செந்தில் ராஜன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தார். ஆனால் முப்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர், செந்தில் ராஜனை வெளியே இழுத்து வந்து அடிக்க முயன்றனர். இதை கண்டித்து கெங்கவல்லி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை